Thursday, 30 July 2020

மருத்துவ உதவி - சேனைத்தலைவர் அன்பருக்கு

மருத்துவ உதவி - சேனைத்தலைவர் அன்பருக்கு

#தென்காசி மாவட்டத்தில் வாழும் நம் உறவிற்கு முக்கியமாக 64 கிராம சேனைத்தலைவர் ஊரை சேர்ந்த நமது உறவு சுடலை சேனையார் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் , அவர் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை இது நாள் வரை காப்பாத்தி வந்தார் . சில மாதங்களுக்கு அதாவது கடந்த வருடம் தீபாவளி க்கு அடுத்த நாள் ஏற்பட்ட பக்கவாதத்தால் தனது உடலில் ஒரு பக்கம் செயல்படமால் சென்று விட்டது , அவர்கள் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில் பல மாதங்கள் தங்கி இருந்து சிகிச்சை எடுத்தும் அவர்களால் சரி செய்ய முடியவில்லை .அவர்கள் சில மாதங்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர் தற்பொழுது அந்த குடும்பம் சுடலை சேனையார் அவர்களின் துணைவியாரின் அவர்கள் கூலி வேலை செய்து அந்த குடும்பத்தை காப்பாற்றி வந்து கொண்டு உள்ளனர் .இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை 4 ஆம் வகுப்பும் , 2 ஆம் வகுப்பும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து கொண்டு உள்ளனர் .


இந்த நேரத்தில் ஆயிக்குடி யை சேர்ந்த , அணைத்து மக்களுக்கும் சாதி மதம் பேதம் இல்லாமல் உதவி செய்யும் "அமர் சேவா சங்கம்" அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளது .அவர்கள் சொன்னது இவரை நாங்கள் அடுத்த ஒரு வருடம் எங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்து அவரை குணமைடைய செய்கிறோம் . அதற்குண்டான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் , அவருக்கு உதவி செய்ய தனி செவிலியர் அமர்த்தி பார்க்க வேண்டும் அதற்க்கு மாதம் 6000 செலவு ஆகும் , அதில் 3000 நாங்களே கொடுக்கிறோம் மீதி 3000 உங்களலால் மாதம் கொடுக்க முடியுமா என்று சுடலை சேனையர் குடும்பத்தை கேட்டு உள்ளார்கள் , தற்பொழுது கஷ்டத்தில் இருக்கும் அவரகள் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யிடம் விண்ணப்பித்து உள்ளார்கள் உதவி செய்ய முடியுமா என்று .

மருத்துவ உதவி மற்றும் மாதம் 3000 அவர்களுக்கு இலவசமாக ஆயிக்குடி "அமர் சேவா சங்கம்" அவர்களுக்கு கொடுத்து பார்த்து கொள்கிறது . மீதி இவர்கள் குடும்பத்தில் இருந்து செவிலியர் செலவிற்கு இவர்கள் தங்கள் பகுதியாக 3000 மாதம் 12 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும் .

இதில் நம் சேனைத்தலைவர் உறவுகளே தென்காசி மாவட்டத்தில் நாம் அணைத்து ஊர்களிலும் உள்ளோம் தென்காசி மாவட்டத்தில் நாம் இல்லாதே ஊர்களே இல்லை . தனி பெரும்பான்மையாக சேனைத்தலைவர் இனம் தென்காசி மாவட்டத்தில் உள்ளது .

இங்கு நாம் சொல்லி கொள்வது அணைத்து ஊர்களிலும் சேனைத்தலைவர் இளைஞர் நற்பணி மன்றம் அல்லது வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் மன்றம் அல்லது வீரபாகு இரத்ததான கழகம் என்று அணைத்து சேனைத்தலைவர்களுக்கான இளைஞர் நற்பணி மன்றம் உள்ளது .

தென்காசி மாவட்டத்தில் பின் வரும் தாலுகா க்கள் உள்ளது இங்கு அணைத்து தாலுகாவில் சேனைத்தலைவர் இனம் தனி பெரும் இனமாக உளள்து .

சங்கரன்கோவில் வட்டம்
தென்காசி வட்டம்
கடையநல்லூர் வட்டம்
ஆலங்குளம் வட்டம்
சிவகிரி வட்டம்
வீரகேரளம்புதூர் வட்டம்
செங்கோட்டை வட்டம்
திருவேங்கடம் வட்டம்

சேனைத்தலைவர் இளைஞர் மக்களே நீங்கள் நினைத்தால் நாம் இந்த குடும்பத்தை தத்து எடுத்து கொள்ள முடியும் . மாதம் ஒவ்வோரு ஊரு இளைஞர் நற்பணி மன்றங்களும் மாதம் 3000 இதே போல் ஓவ்வொரு ஊர் இளைஞர் மன்றங்களும் , இந்த குடும்பத்தின் தேவையான மாதம் 3000 கொடுத்தால் ஒரு வருடத்தில் ஒரு குடும்ப தலைவன் நம் சேனைத்தலைவர் குணம் அடைந்து திரும்பி நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை தொடங்க முடியும் .அந்த இரண்டு குழந்தைகளும் பழைய படி சந்தோசமாக தங்கள் கல்வியை நிம்மதியாக தொடங்குவார்கள் .

நம் #சேனைத்தலைவர் இனம் முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை , நம் இனத்திற்கு நாம் உதவி செய்யமால் வேறு எவர் உதவி செய்வர் .

உறவுகளே நீங்களே சிந்தித்து பாருங்கள் இப்பொழுது நாம் உதவி செய்ய வில்லை எனில்
அவர்களால் அடுத்து மருத்துவ உதவி செய்ய முடியாது , அவர் வாழும் அடுத்த கால கட்டம் முழுவதும் அவரின் வாழ்கை
முடங்கி விடும் , அவர் வாழ்கை யை ஒளி ஏற்றி வைக்க நமக்கு ஒரு வாய்ப்பு .

பல கைகள் ஒருங்கிணைவோம் , தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைத்து ஊரில் உள்ள சேனைத்தலைவர் இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைவோம் அடுத்த ஒரு வருடத்திற்க்கு அந்த குடும்பத்தை நம்மால் தத்து எடுத்து கொள்ள முடியும் அவர்கள் குடும்பம் பழைய படி சந்தாஷமாக வாழ வழி நம் கையில் தான் உள்ளது .

வாசுதேவநல்லூர் இளைஞர் நற்பணி மன்றம் , வாசுதேவநல்லூர் மணி அண்ணாச்சி நற்பணி மன்றம் , சேரன்மகாதேவி இளைஞர் நற்பணி மன்றம் , வி.கே .புதூர் சேனைத்தலைவர் இளைஞர் நற்பணி மன்றம் , சுரண்டை சேனைத்தலைவர் இளைஞர் நற்பணி மன்றம், பொட்டல்புதூர் , முதலியார் பட்டி , இராவணசமுத்திரம் , திருமலைபுரம் இது போன்ற அணைத்து ஊர்களிலும் உள்ள இளைஞர்களே வாருங்கள் நாம் தென்காசி மாவட்டம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் நாம் பரவி உள்ளோம் உங்களால் நம் சமுதாயம் மாற்றம் அடையும்.

ஒரு குடும்பம் கஷ்டத்தில் இருந்து வெளி வரும் தென்காசி மாவட்ட சேனைத்தலைவர் இளைஞர்களால் .நீங்கள் எடுக்கும் இந்த உதவி ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் மனதில் சாதி என்றும் காய் கொடுக்கும் என்ற விதை மனதில் விதையும் .

ஒன்றிணைவோம் , பாதிக்கப்பட்ட குடும்பத்தை தத்து எடுப்போம் .

நாம் மதுவால் குடித்து அழிவதை விட , அந்த செலவில் நம்மால் ஒரு சேனைத்தலைவர் குடும்பம் நல்ல படியாக வாழ்கிறது என்று பெருமையாக மார் தட்டி சொல்ல நம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு .

உதவி செய்ய விருப்ப படும் ஊர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளுங்கள் , மாற்றுவோம் அடுத்த தலைமுறையை , விதைப்போம் சேனைத்தலைவர் இனத்தின் பெருமையை

தொடர்புக்கு

முத்து விஜயன் சேனைத்தலைவர்
94887 52540

சுந்தர சேனைத்தலைவர்
97893 37947

உதயகுமார் சேனைத்தலைவர்
97893 37947

வக்கீல் சிவா சேனைத்தலைவர்
99420 85752

வக்கீல் கே.எஸ்.முத்து சேனைத்தலைவர்
தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
94431 78204

மாரியப்பன் சேனைத்தலைவர்
தென்காசி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்
95002 08687

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

🔰🔰🔰🔰🔰
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .

#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா

நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :

https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )

🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar

பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in