Sunday, 14 March 2021

🔰🔰முருகப்பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் - சுந்தர சேனைத்தலைவர்🔰🔰

 

 

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் என்று பெருமையாக சொல்லுங்கள் , அதற்கான ஆதாரங்கள் இன்றளவும் சிதரம்பம் தில்லை கோவிலிலும் , சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோவிலிலும் 800 வருடங்களாக அதன் உரிமைகள் வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழியாகிய சேனைத்தலைவர் குல மக்களுக்கு இன்றளவும் கொடுக்க பட்டு வருகிறது , அந்த உரிமைக்கான செப்பு பட்டயங்களில் பார்வதி சிலம்பில் உதித்த நவ வீர வீரபாகு வம்ச #சேனைத்தலைவர் குல மக்கள் என்றே இருக்கும் . சேனையார் , சேனைத்தலைவர் என்கிற நமது இனத்தின் குல பெயர் 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலில் தெளிவாக இன்றளவும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலில் உள்ளது , சோழன் காலத்தில் ஈழப்போரில் பங்குகொண்ட சேனையார் குல மக்களின் அறக்கட்டளை என்று தெளிவாக உள்ளது , இன்றும் அக்கோயிலை சுற்றி சேனைத்தலைவர் இன மக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளனர் . எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று . பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது . பட்டங்களை சொல் சேனைத்தலைவர் பிள்ளைமார் சேனைத்தலைவர் மூப்பனார் சேனைத்தலைவர் முதலியார் சேனைத்தலைவர் செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே . எங்கெல்லாம் சேனைத்தலைவர் இனம் அவமானப்படுகிறதோ , எங்கெல்லாம் சேனைத்தலைவர் இனம் ஏமாற்ற படுகிறதோ அங்கு கண்டிப்பாக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தன் இனத்திற்கான கடமையை செய்யும் . சுந்தர சேனைத்தலைவர் மாநில செயலாளர் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

No comments:

Post a Comment