Saturday, 20 June 2020

வீரபாகு தொழில்முனைவோர் அணி - B2B

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர்
வம்சத்தார் அனைவருக்கும் வணக்கம் 🔰🔰
நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை பல காலங்களாக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல காலங்களாக உழைத்து கொண்டு உள்ளது , அதை நோக்கி அணைத்து மாவட்டங்களிலும் நமது சேனைத்தலைவர் இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் தொழில் செய்வதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .சங்கங்களில் சீட்டு பூட்டு சீட்டு போட்டு கடனாளி ஆகாமல் , நாமளே தொழில் தொடங்க பேரவையின் அடுத்த கட்ட முயற்சி .
உறவுகள் அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை , ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால் அச்சமுதாயம் வணிகத்தில் சிறந்து இருந்தால் போதும் அச்சமுதாயம் மேலே வரும் , இதற்கு எடுத்து காட்டாக பல சமுதாயங்கள் உள்ளன .
தொழில் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அன்பர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு எனக்கு 3 இலட்சம் வேண்டும் இல்லை ஒரு இலட்சம் வேண்டும் என்று இல்லை , நம்மால் முடிந்தால் 5000 வைத்து கூட தொழில் செய்ய முடியும் எடுத்து காட்டாக 5000 காய்கறி வாங்கி வீட்டில வைத்து உங்கள் தெருவில் உள்ள மக்களுக்கு கொடுக்க முடியும் .நமது குல தொழிலான கொடிக்கால் வெற்றிலை யை வாங்கி வெற்றிலை கிடைக்காத பகுதிகளில் நம்மால் விக்க முடியும் .இதே போல் எண்ணற்ற தொழில்கள் உள்ளன .
நம்மால் முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை , நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் கனவு அடுத்த இரண்டு வருடங்களில் 100 தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.
தொழில் செய்பவர்கள் அல்லது தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் நமது சேனைத்தலைவர் மக்கள் பதிவு செய்ய பின் வரும் லிங்கை கிளிக் செய்யக .
நமது பேரவையின் குறிக்கோள் என்பது அணைத்து வியாபாரிகள் , மருத்துவர்கள் , காவலர்கள் , வழக்கறிஞர்கள் அனைத்து விதமான தொழில் செய்பவர்களையும் ஒருங்கிணைப்பது , நமக்கு தேவையான அனைத்தையும் நாம் இன மக்களிடம் பெற்று கொள்வது .இதன் மூலம் நம் இன மக்களின் பொருளாதாரம் மென்மேலும் பெருகும் , வேலை வாய்ப்புகள் பெருகும் , சட்ட பாதுகாப்புகள் கிடைக்க பெரும் .மொத்தத்தில் நம் இனத்தின் எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம் .
மேலும் தொடர்பு கொள்வதற்கு
சுந்தர சேனைத்தலைவர் - 9955253204
உங்கள் தொழிலை பதிவு செய்வதற்கு :
வீரபாகு சேனையங்காடிகள் அணி( வீரபாகு தொழில்முனைவோர் அணி ) -
B2C : Business to Customer , B2B : Business to Business



No comments:

Post a Comment