நன்றியுரை - சேனைத்தலைவர் இன சொந்தங்களுக்கு மற்றும் தமிழ்நாட்டின் துணை முதல்வர் மாண்புமிகு திரு ஓ.பன்னீர்செல்வம் ஐயா அவர்களுக்கும் தமிழகத்தின் அமைச்சர் மாண்புமிகு திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும்
--------------------
--------------------
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களை மதுவிற்கு அடிமையாக்கி அவர்களின் வரலாறு தெரியாமல் ஆக்கிவிட்டால் போதும் அந்த இனம் தன்னால் அழிந்து விடும் .
வரலாறு தெரியாத எந்த ஒரு இனமும் நிலைத்து இருந்ததாக சரித்திரம் இல்லை .
ஆதலால் வரலாறு சந்திப்பை ஒவ்வொரு ஒன்றியம் தோறும் நடத்தி சேனைத்தலைவர் இன மக்களை ஒற்றுமை படுத்தி , அவர்களுக்கு நம் வரலாறை தெரிய செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை முடிவு செய்தது .
நான்கு மாதங்களுக்கு முன் களப்பணி ஆரம்பம் ஆகியது , கயத்தாறு ஒன்றியம் தேர்ந்து எடுக்க பட்டது ,ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்றால் தடங்கல்கள் பல வரும் ,அதே போல் பல தடங்கல்கள் வந்தன கயத்தாறு ஒன்றிய நிர்வாகிகள் பயமுறுத்த பட்டார்கள்,சேனைத்தலைவர் மண்டபம் கிடைக்க விடாமல் தடை செய்ய பட்டது .ஆனால் அதற்கு கயத்தாறு ஒன்றிய நிர்வாகிகள் அவர்கள் வீழ்ந்து விடவில்லை வேறு வழிகள் தேடினர் . அதுவும் சரி செய்யப்பட்டது , அதன் பிறகு தொழில் ரீதீயாக பயமுறுத்த பட்டார்கள் .அதிலும் அவர்களின் மன உறுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை .
நான்கு மாதங்களுக்கு முன் களப்பணி ஆரம்பம் ஆகியது , கயத்தாறு ஒன்றியம் தேர்ந்து எடுக்க பட்டது ,ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்றால் தடங்கல்கள் பல வரும் ,அதே போல் பல தடங்கல்கள் வந்தன கயத்தாறு ஒன்றிய நிர்வாகிகள் பயமுறுத்த பட்டார்கள்,சேனைத்தலைவர் மண்டபம் கிடைக்க விடாமல் தடை செய்ய பட்டது .ஆனால் அதற்கு கயத்தாறு ஒன்றிய நிர்வாகிகள் அவர்கள் வீழ்ந்து விடவில்லை வேறு வழிகள் தேடினர் . அதுவும் சரி செய்யப்பட்டது , அதன் பிறகு தொழில் ரீதீயாக பயமுறுத்த பட்டார்கள் .அதிலும் அவர்களின் மன உறுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை .
கடைசியாக உள் அரங்கத்தில் நடத்த அனுமதி தேவை இல்லை என்றாலும் , கயத்தாறு ஒன்றிய சூழ்நிலையால் காவல்துறை அனுமதி கோரப்பட்டது "சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு நடத்த " ஆனால் அனுமதி கிடைக்கவில்லை .
கள நிலவரத்தால் அனுமதி கிடைக்கவில்லை என்பதை தமிழ்நாட்டின் துணை முதல்வர் மாண்புமிகு திரு ஓ.பன்னீர்செல்வம் ஐயா அவர்களின் கவனத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டின் அமைச்சர் மாண்புமிகு திரு கடம்பூர் ராஜு அவர்களின் கவனித்திற்கும் கொண்டு செல்லப்பட்டது .அவர்களின் தரப்பில் இருந்து காவல்துறைக்கு எடுத்துரைக்கப்பட்டது இச்சந்திப்பு சாதியாக பார்க்காமல் கல்வி , மது இல்லா சூழல் , வரலாறு , வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால் நல்லது என்று எடுத்துரைக்கப்பட்டது .
கடைசியாக கோவில்பட்டி மாவட்ட துணை கண்காளிப்பாளர் DSP ஜெபராஜ் ஐயா எங்களை தொடர்புகொண்டு நிகழிச்சி நிரல்களை தெரிந்து கொண்டு நல்லபடியாக நடத்துங்கள் ஆனால் பல நிபந்தனைகள் உள்ளன அதை கடைபிடித்து நடத்துங்கள் என்று நமக்கு அனுமதி அளித்தனர் .
கடைசியாக நிபந்தனைகைளை கடைபிடித்து நமது வரலாறு சந்திப்பு 300 பேர்களுக்கு மேல் எந்த விதமான பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்தது .
இதில் பெரும் மகிழ்ச்சியான விசியம் இதில் எவரும் மது அருந்தி வரவில்லை , வீரபாகு சேனைத்தலைவர் கோவில் க்கு சென்று வருவது போல் சந்திப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை எந்த விதமான மது பழக்கம் , ஆர்ப்பாட்டம் இல்லாமல் சென்றுள்ளனர் .பேரவையின் அன்பு கட்டளைக்கு கீழ் படிந்து நடந்து கொண்ட அணைத்து சேனைத்தலைவர் சொந்தங்களுக்கும் நன்றிகள் பல
இந்த சந்திப்பிற்கு உறுதுணையாகவும் , பாதுகாவலாகவும் இருந்த தமிழ்நாடு காவல்துறைக்கும் பேரவை சார்பாக நன்றிகள் .
மேலும் தமிழ்நாட்டின் துணை முதல்வர் மாண்புமிகு திரு ஓ.பன்னீர்செல்வம் ஐயா அவர்களுக்கும் தமிழகத்தின் அமைச்சர் மாண்புமிகு திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பேரவை சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் S .P .சண்முகநாதன் அவர்களுக்கும் பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கோவில்பட்டி மாவட்ட துணை கண்காளிப்பாளர் DSP ஜெபராஜ் அவர்களுக்கும் , கயத்தாறு காவல் துறைக்கும் பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இளம் விஞ்ஞானி விருது வழங்க வந்த அன்பு அண்ணன் Assistant commissioner இளவரசன், Defense , திருச்சி அவர்களுக்கும் பேரவை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
மேலும் வரும் சேனைத்தலைவர் குல சொந்தங்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் 400 பேருக்கு சாப்பாடு தயார் செய்த கயத்தாறு ஒன்றிய பேரவை சொந்தங்கள் அனைவருக்கும் பேரவை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் கயத்தாறு ஒன்றிய சேனைத்தலைவர் மக்களிடம் சென்று இதே போல் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை , சேனைத்தலைவர் குல வரலாறு மீட்பு சந்திப்பு நடத்துகிறது உங்களால் முடிந்த நன்கொடை கொடுங்கள் என்று கேட்டபொழுது தங்களால் இயன்றதை கொடுத்து உதவிய கயத்தாறு ஒன்றிய சேனைத்தலைவர் மக்கள் அனைவருக்கும் பாதம் தொட்டு நன்றியை செலுத்தி கொள்கிறோம் .
அனுமதி வாங்க போராடிய ஹரி சேனைத்தலைவர் , முத்து விஜயன் சேனைத்தலைவர் , அருணாச்சலம் சேனைத்தலைவர் , வக்கீல் ஷங்கர் சேனைத்தலைவர் ,உதயகுமார் சேனைத்தலைவர் , சுந்தர சேனைத்தலைவர் அனைவருக்கும் பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
ஓன்று தெரிவித்து கொள்கிறோம் ஒரு ஒன்றியத்தில் நடத்த வேண்டிய சந்திப்பை நாம் நடத்துவதற்கு தமிழகத்தின் துணை முதல்வர் மற்றும் தமிழகத்தின் அமைச்சர் பெருமக்கள் வரை சென்று இருக்கிறோம் .
இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் நாம் ஒற்றுமையாக செயல்பட எவ்வளவு போராட வேண்டி உள்ளது .சேனைத்தலைவர் தானே , இலைவாணியன் தானே என்ன செய்து விட போகிறார்கள் என்று நினைத்து கொண்டு ஏளனமாக இருக்கிறார்கள் அனைவரும் .உங்கள் சொந்த வரலாறு சந்திப்பை உங்கள் சொந்த இடத்தில உங்களால் நடத்த முடியவில்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள் நம் நிலைமையை .
ஆனால் சேனைத்தலைவர் இனம் ஒன்றை தொட்டு விட்டால் அதை அடையாமல் விடாது என்பதற்கு இதுவே உதாரணம் .
ஒற்றுமையே பலம் , ஒற்றுமை இருந்து விட்டால் போதும் நம்மால் முடியாதது எதுவும் இல்லை .
எவனுக்கும் நீ பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை , நெஞ்சை நிமிர்த்தி திமிராக சொல் இலைவாணியன் என்று , வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த வம்சம் என்று .நம்மால் முடியாதது எதுவும் இல்லை .
நமது நோக்கம் சரியாக இருப்பின் நமது தெய்வம்,நமது முன்னோடி வீரபாகு சேனைத்தலைவர் என்றும் நமக்கு துணையாக இருப்பார் .
சாதி வெறி வேறு , சாதி பற்று வேறு என்று புரிந்து கொண்டு செயல்படுங்கள் .
இப்படிக்கு
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர் #பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர் #பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
No comments:
Post a Comment