Saturday, 20 June 2020

109 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்க போகும் சேனைத்தலைவர் மகாஜன சங்கம் ,

109 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்க போகும் சேனைத்தலைவர் மகாஜன சங்கம் , நூற்றாண்டு கண்ட சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வாழ்த்தி தலை வணங்குகிறது .
சேனைத்தலைவர் குல உறவுகள் அனைவரும் நாம் முதலில் தலை வணங்குவோம் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு .


சோழர்கள் காலத்திலே "சேனைபெருங்காணி சங்கம்" என்று சங்கம் வைத்து வாழ்ந்த சேனைக்குடி வம்சம் நாம் , அந்த சங்கத்திற்கு கீழ் இருந்த நமது போர் குடி மூன்று கை மகாசேனையார் , சேனையார் , பெரும்படையார் . அதே போல நமது நூற்றாண்டு கண்ட சேனைத்தலைவர் மகாஜன சங்கம் ஆரம்பித்து 108 வருடம் ஆகுகிறது.
யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் எந்த ஒரு வசதியும் இல்லாமல் 100 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சேனைத்தலைவர்களையும் இணைத்து உருவாக்க பட்ட சேனைத்தலைவர் மகாஜன சங்கம் இன்று நூற்றாண்டு கண்ட மகாஜன சங்கம் வேறு எந்த இனத்தவருக்கும் கிடையாது இந்த பெருமை .
135 வருடத்திற்கு முன் விதைக்கப்பட்ட விதை சேனைத்தலைவர் மகாஜன சங்கம் .இது கருவாக உருவாகிய வருடம் 1885 அதன் பிறகு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் உதித்த வருடம் 1912 மே மாதம்.
சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் சேனைத்தலைவர் மடங்கள் அனைத்தும் நமது சொத்துக்கள் அனைத்தும் நமது முப்பாட்டன்களின் வியர்வையில் தோன்றியவை அதை பாதுகாப்பதும் அதை மதிப்பதும் முக்கியமாக தவறான நிர்வாகம் இருந்தால் அதை சரி செய்வதும் நமது கடமை .
திருச்செந்தூர் , திருநெல்வேலி , குற்றாலம் , சங்கரன் கோவில் , திருநெல்வேலி , தீர்த்தமலை , திருவண்ணாமலை,பெண்ணாடம் போன்ற பகுதிகளில் உள்ள மடங்கள் மடங்களுக்கு பாத்தியப்பட்ட ஊர்களுக்கு சொந்தமான
சேனைத்தலைவர் மக்களுக்கு பாத்தியப்பட்டது பல நூறு வருடங்களுக்கு முன்னாள் உருவாகிய வரலாறு இந்த மடங்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் வியர்வையில் உருவாகியது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமில்லை , இது நம் உரிமை நம் சொத்து .
இதில் முக்கியமாக நாம் நன்றிகளை தெரிவித்து கொள்வது ,
சேனைத்தலைவர் சமுதாய பாதுகாவலர் ,
எங்களின் முன்னோடி ,வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மாமேதை , தமிழக அரசியலில் சந்திரனாலும், சூரியனாலும் அருளாளராக போற்றப்படும் ,
திரு . "ஆர்.எம் .வீரப்பன்" ஐயா .
நமது சேனைத்தலைவர் சமூகம் கட்டமைப்பு உருவாவதற்கும் , ஊர் தோறும் கல்வி நிலையங்கள் , திருமண மண்டபங்கள் கட்டப்படுவதற்கு பல மக்கள் உழைத்துள்ளனர் ,
அதே போல் சென்னையின் மத்திய பகுதியில் பெரும் நிலப்பரப்பில் மாளிகை போல் அமைந்துள்ள நமது சேனைத்தலைவர் மாளிகை எழுவதற்கு பல உள்ளங்கள் துணை நின்றுள்ளன , 1982 கால கட்டங்களில் இம்மாளிகை கட்டுவதற்கு இந்நிலப்பரப்பை வாங்குவதற்கு சில பல காரணங்களால் முடியாமல் இருந்த பொழுது அதை வாங்குவதற்கு முழு நன்கொடை கொடுத்து அதை பத்திர பதிவு செய்யும் செலவு ஏற்றவர் நமது ஆர்.எம் .வீரப்பன் ஐயா .
இம்மாளிகையின் அடிக்கல் நாட்டிய பிறகும் , கட்டிட வேலை ஆரம்பித்த பிறகும் மாளிகைக்கு வைத்த பெயர் "ராஜம்மாள் வீரப்பன் திருமண மண்டபம் " , ஆனால் கட்டி முடித்த பிறகு அதற்க்கு வைத்த பெயர் " சேனைத்தலைவர் மாளிகை " . ( இந்த தகவல் அனைத்தும் கொடுத்து உதவியவர் சீனு ஜெயராமன் ஐயா அவர்கள் )
மேலும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உருவாக காரணமாக இருந்த #சேனைத்தலைவர் குல செம்மல் ஆத்தூர் மணி ஐயா அவர்களின் கனவாக இப்பேரவை உருவாகி உள்ளது , அவர் இந்த சமுதாயத்திற்கு செய்த பணிகள் ஏராளம் , அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆசை பட்டாரோ , அக்கனவுகள் அனைத்தும் கூடிய விரைவில் நிஜங்களாக இருக்கும் , ஐயா உங்களுக்கு ஒவ்வொரு சேனைத்தலைவரும் காலம் முழுவதும் கடமை பட்டுள்ளோம் . என்றும் நீங்கள் என்றும் எங்கள் கூட இருப்பீர்கள் .
சேனைத்தலைவர் மகாஜன சங்கம் உருவாக்கிய நமது முன்னோடிகள் பெருமக்கள் அனைவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன .
சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தை தோற்றுவித்த பெருமை பட்டுக்கோட்டை தமிழறிஞர் திரு .சிவ.மா. நாராயணசாமி செட்டியாரை சாரும் . இவர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், அப்போது தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் தினசரி பத்திரிகையான சுதேசமித்ரனில் ஆசிரியராக பணி புரிந்தவர். பணியின் நிமித்தம் தமிழ்நாடு, திருவிதாங்கூர், மைசூர் பகுதிகளுக்கு சென்று வர நேரிட்டது, அப்போது நமது சேனைத்தலைவர் சமூக மக்கள் சேனை #முதலியார், #செட்டியார், #மூப்பனார்,#கொடிக்கால் பிள்ளை போன்ற பட்டங்களால் அழைக்கபடுவதையும், நமது குலமக்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்வதை கண்டு, அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பட்டுக்கோட்டையில் தனது "இலக்குமி விலாசம்" என்ற இல்லத்தில் 23-6-1912 அன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த முதற்கூட்டத்திற்கு வருகைதந்த முக்கியமானவர்கள்.
பாரிஸ்டர் கே.சி.சுப்ரமணிய #செட்டியார்,தில்லையாடி புலவர் ந.தம்பியப்ப செட்டியார்(இவர் பெரும்புலவர் இவரை பற்றி தகவல்கள் எடுக்கப்பட்டு கொண்டு உள்ளன , அடுத்த பதிவுகளில் பதிய படும் ),கொல்லம் டி.பி.மூப்பனார்.
முதல் சேனைத்தலைவர் மகாஜன மாநாடு அமைப்பு கூட்டம் 1913 ஏப்ரல் 15 ஆம் நாள் புதுவை படாங்கு வைத்திலிங்க செட்டியாரவர்கள் இல்லத்தில் பாரிஸ்டர் தலைமையில் நடந்தது .அக்கூட்டத்தின் முடிவு படி மாநாடு 1913 ஜூன் 9 ஆம் நாள் முருகப்பெருமான் திருக்கோவில் கொண்டிருக்கும் மைலத்தில் சேனைத்தலைவர் வம்ச புதுவை அப்பு செட்டியார் அவர்கள் சத்திரத்தில் நடைபெற்றது .பாரிஸ்ட்டர் தலைமை ஏற்றார் .படாங்கு வைத்தியலிங்க செட்டியார் வரவேற்பு குழு தலைவராயிருந்தார் .
இரண்டாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1914 ஜூன் 13
தலைமை : பாரிஸ்டர் பொறையாறு சுப்ரமணிய செட்டியார்
வரவேற்பு : திரு . சொக்கலிங்க செட்டியார்
இடம் : பட்டுக்கோட்டை
மூன்றாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1914 ஜூன் 13
தலைமை : பாரிஸ்டர் பொறையாறு சுப்ரமணிய செட்டியார்
வரவேற்பு : திரு . கொல்லம் மூப்பனார்
இடம் : குற்றாலம்
நான்காவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1916 ஜூன் 15
தலைமை : பாரிஸ்டர் பொறையாறு சுப்ரமணிய செட்டியார்
வரவேற்பு : திரு . பிச்சையா மூப்பனார்
இடம் : சிவகிரி , நெல்லை மாவட்டம் .
ஐந்தாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1926 அக்டோபர் 23
தலைமை : திரு. கோபால் செட்டியார்
முயற்சி செய்தவர்கள் : திரு நாகை குரு .குமாரசாமி செட்டியார்
இந்த மாநாட்டில் தான் நாம் பிற்போக்கு பிரிவில் இணைக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது .
இடம் : நாகப்பட்டினம் .
ஆறாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1937அக்டோபர் 3 ,4
தலைமை : பாரிஸ்டர் பொறையாறு சுப்ரமணிய செட்டியார்
இந்த மாநாட்டில் தான் நாம் பிற்போக்கு பிரிவில் இணைக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது .
இரண்டு நாட்கள் நடைபெற்றது , முக்கியமாக முதல் சேனைத்தலைவர் மாதர் மாநாடும் இரண்டாம் நாள் நடைபெற்றது
தலைமை : நாகை திருமதி .இரஞ்சிதாம்பாள்
இடம் : அம்பை , நெல்லை மாவட்டம் .
இந்த மாநாட்டில் தெரிவது 1937 அன்றே நம் சேனைத்தலைவர் இனம் மகளிர்க்கு பெருமதிப்பு கொடுத்து சேனைத்தலைவர் #மாதர் #மாநாடு நடத்திய முதல் இனம் என்று பெருமை கொள்வோம் .
கல்விக்கென்று சேனைத்தலைவர் கல்வி #அறக்கட்டளை 1944 இல் ஆரம்பிக்கப்பட்டது , இதில் இருந்து தமிழ்நாட்டில் முதன் முதலாக கல்விக்கென்று ஆரம்பிக்கப்பட்ட முதல் அறக்கட்டளை என்று பெருமை கொள்வோம் .
ஏழாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1955 மே 28 ,29
தலைமை : திரு. குஞ்சிதபாத செட்டியார்
வரவேற்பு : திரு தங்கவேல் செட்டியார்
இடம் : தருமபுரி
எட்டாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு -
தலைமை : திரு. குஞ்சிதபாத செட்டியார்
வரவேற்பு : திரு வீரபத்திரன்
இடம் : போடிநாயக்கனூர்
ஒன்பதாவது சேனைத்தலைவர் மகாஜன மாநாடு - 1974 டிசம்பர் 14 ,15
தலைமை : திரு.கே.ஜி.குமாரசாமி செட்டியார்
வரவேற்பு : திரு.கே.ஏ.சண்முக வேல்
இடம் : சென்னை
சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தகவல்கள் அனைத்தும் தந்தவர் டாக்டர் வை.தட்ஷிணாமூர்த்தி
அதன் பிறகு நடைபெற்ற வருடம் சேனைத்தலைவர் மகாஜன சங்கம் நூற்றாண்டு மாநாடு திருநெல்வேலியில் 2013 இல் நடைபெற்றது . அதில் நமது முன்னோடி ஆர்.எம்.வீரப்பன் , முன்னாள் தமிழக அமைச்சர் மற்றும் திரு .கே.வி.சுப்பிரமணியன் சங்க தலைவர் , திரு .சீனு செயராமன் மற்றும் திரு .முத்துக்குமார் அவர்களின் முயற்சியால் நடைபெற்றது .
அதன் பிறகு எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை , மேலும் நம் இனம் வளர்ந்ததா என்று கேட்டால் இல்லை , 1980 க்கு பிறகு நம் இனம் படும் வேதனைகள் அதிகம் .கொடிக்கால் பிள்ளை வேறு சாதி சான்றிதழ் வாங்குதல், #சேனைத்தலைவர் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு , சாதி கலப்பு , சாதி சான்றிதழ் மாற்றம், சட்ட பாதுகாப்பு இல்லை , சொத்து பாதுகாப்பு இல்லை , வேலை வாய்ப்புகள் இல்லை இன்னும் பல
இதன் மூலம் நமக்கு அடுத்து ஒரு மாநாடு தேவையா என்று கேட்டால் எதுவும் வேண்டாம், நம் மக்களுக்கு #வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் , #தொழில் முனைவோர் ஆக்குவோம், #கல்வி இல் சிறக்க செய்வோம் , #அரசு பதவிகளில் உக்கார செய்வோம் ,ஒரு சேனைத்தலைவனுக்கு பிரச்னை என்றால் ஓடி சென்று உதவும் எண்ணத்தை உருவாக்குவோம் ,முக்கியமாக பெருமை மிகு சேனைத்தலைவர் குல வரலாறு தெரிந்து கொள்வோம் ஒன்றியம் தோறும் நடைபெறும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நடத்தும் சேனைத்தலைவர் குல வரலாறு சந்திப்பு இல் கலந்து கொள்வோம் அதன் முயற்சியாக கடந்த 2020 பிப்ரவரி மாதம் கயத்தாறு ஒன்றியத்தில் நடைபெற்ற சேனைத்தலைவர் குல சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் 400 பேர் . அதன் வீரியம் அணைத்து இடங்களிலும் நமது மக்கள் சேனைத்தலைவர் சேனைத்தலைவர் என்று வரலாறு பேச ஆரம்பித்துள்ளனர் .இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் சேனைத்தலைவர் இனம் வரலாறு பேச ஆரம்பித்துள்ளது, இனத்தின் துயரங்களை துடைக்க ஆரம்பித்துள்ளது,சேனைத்தலைவர் இனம் எழுச்சி கண்டுள்ளது என்றால் அதற்க்கு முதல் காரணம், விதை வைத்தது அனைத்தும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சாரும்
கூடிய விரைவில் அடுத்த சேனைத்தலைவர் குல #வரலாறு மீட்பு #சந்திப்பு நடைபெறும் .
108 வருடங்களுக்கு முன்னாள் மே மாதம் சேனைத்தலைவர் #மகாஜன #சங்கம் ஆரம்பித்து 109 ஆவது வருடம் ஆரம்பம் ஆகுகிறது , இதற்காக உழைத்த அணைத்து சேனைத்தலைவர் சமுதாயத்தின் முன்னோடிகளையும் நமது முப்பாட்டன்களையும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை பாதம் தொட்டு வணங்குகிறது .
இன்னும் பல உள்ளன , வரலாறு தெரிந்து கொள்ள வேண்டுமா , இனத்திற்க்காக போராட வேண்டுமா , சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் , சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையில் உறுப்பினர் ஆக :
-----> shorturl.at/kmCI1 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தலைமையகம்
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#காந்தியடிகள் #காந்தி

No comments:

Post a Comment