Saturday, 20 June 2020

நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று



ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு நடத்துவது தான் சேனைத்தலைவர் இனத்திற்கு பழக்கம் , நன்றாக கேட்டு கொள்ளுங்கள் உறவுகளே , நாம் நடத்துவது கட்சி கூட்டமோ அல்லது சாதி கூட்டமோ அல்ல நாம் நடத்த போவது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்க , அவர்களை நல்வழி படுத்தி மதுவில் இருந்து மீட்டு , அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி , அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கி பொருளாதாரத்தில் மேம்படுத்துவதே மேலும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு சமுதாய பாதுகாப்பு கொடுப்பதற்கும் அவர்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் உடனே நம்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
இருக்கும் என்ற நம்பிக்கை விதைப்பதற்க்கும் ஆகும் .
செயல் ஒன்றே நம் இன மக்களை மேல் கொண்டு செல்லும் , நம் தாத்தன்மார்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் ஊர் ஊராக மண்டபம் மற்றும் கோவில் கட்டி விட்டு சென்று விட்டார்கள் . நாம் நம் தலைமுறையில் என்ன செய்ய போகிறோம் , நம் இனத்திற்கு .
எனக்கு அவன் உதவவில்லை , இவன் உதவ வில்லை , நம் இனத்தில் உள்ள பணக்கார மக்கள் எனக்கு உதவவில்லை என்று குறை சொல்வதை விட்டு விட்டு நாம் உதவி செய்ய ஆரம்பிப்போம் , அடுத்த தலைமுறை நம்மிடம் இருந்து கற்று கொள்ளும் உதவி செய்வதற்கு .
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி மக்களே , சேனைத்தலைவர் மரபு வழி வந்த கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனமே ,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனமே ,சோழர் , பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி மக்களே ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார் ” மக்களே .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார் ,சேனை செட்டியார் என்றும் செட்டியார் மக்கள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்களே ,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்களே ,
நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று , நீ சங்க காலத்தில் இருந்து 2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பேரும்,புகழும் பெற்ற தமிழ் மூத்த குடி , போர் குடி , வேளாண் குடி , வணிக குடி , இலைவாணிய குடி ஆகிய சேனையார் இனத்தின் ஒரு அடையாளம் என்று மறந்து விடாதே .
சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204
மாநில ஒருங்கிணைப்பாளர்
சேனையங்காடிகள் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
இப்படிக்கு
தொழில்நுட்ப பிரிவு - IT Wing
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

No comments:

Post a Comment