Saturday, 20 June 2020

கொடிக்கால் வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

கொடிக்கால் வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


தமிழக அரசே உடனே வெற்றிலை விவசாயிகளை காப்பாற்று , உயிரை கொள்ளும் மதுவிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை , இந்த கொரோனா காலத்தில் விளைந்த வெற்றிலைகளை விற்பதற்க்கு வழி இல்லாமல் துவண்டு போய் அதை ஆற்றில் கொட்டும் நிலைமையில் எங்கள் கொடிக்கால் விவசாயிகள் உள்ளனர் .
வெற்றிலைக்கென்று இருந்த கொடிக்கால் வம்சத்தின் கடைசி வெற்றிலை தலைமுறை கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்து கொண்டு உள்ளது , காலம் காலமாக கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்து அதை வணிகம் செய்த இலைவாணிய வம்சமாகிய சேனைத்தலைவர் இனம் தற்பொழுது தன் குல தொழில் லில் ஏற்படும் நஷ்டம் காரணமாக கொடிக்கால் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று கொண்டு உள்ளனர் , தற்பொழுதும் கடைசி தலைமுறை கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்து கொண்டு உள்ளனர் குல தொழில் மேல் உள்ள நம்பிக்கையில் அவர்களும் எங்கள் குல தொழிலை விடும் முன் உடனே அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் .இல்லை என்றால் அடுத்த பத்து வருடங்களில் மருத்துவ பயிர் என்று அழைக்கப்படும் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை இல்லாமல் அழிந்து விடும் .
முக்கியமாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, கிளாங்காடு, கம்பிளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிலை பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை தற்போது 150 ஏக்கா் பரப்பளவில் பயிரிப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வெற்றிலைத் தொழிலை நம்பி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளா்கள் நேரடியாகவும், 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனா். வெற்றிலை கொடிக்காலில் பணிசெய்ய மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து தொழிலாளா்கள் வருகின்றனா்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பணியாளா்கள் வெளியூா்களிலிருந்து வேலைக்கு வர முடியாத நிலை உள்ளது. பறித்த வெற்றிலையை வெளியூா்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே தமிழகம் முழுவதும் உள்ள வெற்றிலை விவசாயிகளுக்கு உடனே கடந்த மூன்று மாதங்களுக்கு சேர்த்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது .இதை மட்டும் நீங்கள் செய்தால் ஒட்டுமொத்த கொடிக்கால் சேனைத்தலைவர் வம்சம் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தெரிவித்து கொள்கிறது.
🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#tngovt #Taminadu #Govt #kodikkal #corona
#TN #தமிழகஅரசு #அரசு

No comments:

Post a Comment