Saturday, 20 June 2020

நம் தமிழ் குடிகள் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,

நம் தமிழ் குடிகள் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,
நம் தமிழ் குடிகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நம் அரசு சொல்வதை தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள் , நாம் நன்றாக இருக்கிறோம் , ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கிறோம் என்று நினைக்காமல் , நமக்கு வராது என்று அலட்சியமாக இல்லாமல் நமது அரசிற்கு கட்டுப்பட்டு நாம் அவர்கள் சொல்வதை கேக்க வேண்டும் .
அடுத்த மாதம் பிறந்தால் கடன் கட்ட வேண்டும் , எப்படி இன்னும் பத்து நாட்களை எந்த வித வருமானமும் இல்லாமல் தாண்டுவது , பள்ளிக்கூட கட்டணங்கள் , EMI , கடன் பிரச்னை , சாப்பாடு பிரச்னை , மருத்துவ செலவுகள் இவை அனைத்தும் நாம் அனைவரும் உயிருடன் இருந்தால் நம்மால் சரி செய்து விட முடியும் ஆனால் கொஞ்ச காலம் கஷடப்பட வேண்டி இருக்கும் . நாம் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு எதாவது நடந்து விட்டால் அடுத்து நாம் குடும்பத்தை கவனித்து கொள்வது எவர் என்று யோசித்து வீட்டுக்குள் இருக்குமாறு அணைத்து தமிழ் குடிகளையும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக கேட்டு கொள்கிறோம் .
கண்டிப்பாக நம் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நாம் அனைவரும் ஓன்று சேர வேண்டும் நம்மால் முடிந்த உதவிகளை கஷடப்படுவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் . பணம் அதிகம் உள்ளவர் அணைத்து பொருட்களையும் ஒரே நாளில் வாங்கி பொருட்கள் தட்டுப்பாடு உருவாக்கி விட வேண்டாம் .
நம்மை எதற்காக வீட்டில் இருக்க சொல்கிறார்கள் என்றால்
#இத்தாலியில் கோர தாண்டமாடும் கொரோனா....!*
தினமும் சராசரியாக 700 பிணங்கள் விழுவதால்... பிணங்களை புதைக்க வசதியோ,ஆட்களோ,இடமோ இல்லை "கண்ணீர் விட்டு அழும்"இத்தாலி பிரதமர்.
யாரால் இந்த நிலை வந்தது.....?
பொறுப்பற்ற அலட்சியமான அந்நாட்டு குடிமக்களால்.வெறும் 6 கோடி ஜனத்தொகை கொண்ட குட்டி நாடு இத்தாலிக்கே இந்த நிலை என்றால்.....,
130 கோடிக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட பரந்து விரிந்த நம் தேசத்துக்கு அந்த நோய் பரவி அப்படியொரு நிலை வந்தால்....? யாரும் தப்பிக்க முடியாது. உயிர் பலிகள் பல லட்சங்களில்,ஏன் கோடிகளில் கூட கொண்டு போய் நிறுத்தும்...!!!
இன்று இத்தாலிக்கு ஏற்பட்ட நிலை நம் நாட்டுக்கு வராமல் இருக்க,இந்த நோய்க்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கின்ற வரை ஒவ்வொரு இந்திய குடிமகனும் மிகவும் பொறுப்புடன் அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து நாட்டையும் நாட்டு மக்களையும் நோய் பரவாமல் காப்பாற்ற வேண்டும்.இந்த விஷயத்தில் யாருக்கும் கொஞ்சம் கூட அலட்சியம் வேண்டாம்.
நம்ம ஊரில் வெளிநாட்டுல இருந்து யாராவது வந்தார்கள் என்றால் அவர்களை ஒரு 10 நாள் வீட்ல குடும்பத்தோட இருந்துட்டு அப்புறம் வெளியில வர சொல்லுங்கள் , வெளிநாட்டுல இருந்து வந்து யாருக்காவது உடம்பு சரி இல்லை என்று தெரியவந்தால் உடனே பேரூராட்சி அலுவலர்கள் சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் !
தயவு செய்து மத்திய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை அளிப்போம் !
சுயகட்டுப்பாடே நம்மை காப்பாற்றுவோம் , நம் குடும்பத்தை காப்பாற்றுவோம், நம் நாட்டை காப்பாற்றுவோம்



No comments:

Post a Comment