சேனைத்தலைவர் குல வரலாறு மீட்பு சந்திப்பு 2.0
-----------------------------------
-----------------------------------
கயத்தாறு ஒன்றியத்தில் நடந்து முடிந்த சந்திப்பில் , எங்கள் ஐயன் எங்கள் முன்னோர்கள் ஆயிரம் வருடங்களாக ( செப்பு பட்டயங்கள் கிடைத்த தகவல் படி ) எந்த செயலை செய்தாலும் குல கடவுளான முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் யை வணங்கி விட்டு நல்ல காரியங்களை செய்தனர் .அதன் படி
சேனைத்தலைவர் குலத்தின் மூத்த குடி வீரபாகு சேனைத்தலைவர் க்கு பூஜை செய்து விட்டு மற்றும் எம் குலத்தின் முன்னோடி அந்த மண்ணின் முத்த குடிமகள் வைத்து விளக்கு ஏற்ற பட்டு வரலாற்று சந்திப்பு நடத்தப்பட்டது . இனிதே சேனைத்தலைவர் வரலாறு மீட்பு நடத்தப்பட்டது Feb 16 2020 அன்று .
நம் பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் வருடம் தோறும் வீரபாகு சேனைத்தலைவர் ஜெயந்தி அனைத்து ஊர்களிலும் வெகு சிறப்பாக கொண்டாட பட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி அதை செயல்படுத்தவும் செய்தது . மேலும் கல்வி மேம்பாட்டில் தனி அணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் இது வரை பல மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் படிப்பதற்கு வழி ஏற்படுத்தி உள்ளது .இன்னும் தொடர்ந்து கொண்டு உள்ளது கல்வி மேம்பட்டு குழுவின் பணி .IAS , IPS , VAO போன்ற அரசு தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்று அதெற்கென்று வழிகள் உருவாக்கப்பட்டு அப்பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டு உள்ளது .
மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அணைத்து ஒன்றியங்களிலும் சேனைத்தலைவர் குல வரலாற்று சந்திப்பு நடத்தி அவ்வொன்றிய மக்களிடம் சேனைத்தலைவர் குலத்தின் வரலாறுகளை தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கவும் மேலும் பேரவை மேல் நம்பிக்கை கொள்ளவும் வழி செய்யப்பட்டது .
அதன் செயல்பாடாக கயத்தாறு ஒன்றியத்தில் முதல் சந்திப்பு நடத்தி அவர்களிடம் உள்ள ஒற்றுமையை "இளம் விஞ்ஞானி விருது பெற்ற " இலைவாணிய செல்வி முப்பிடாதி அவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா (NASA - USA ) செல்வதற்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள் அவர்கள் செல்வதற்கு உங்களால் உதவ முடியுமா என்று கேட்டவுடன் தன வீட்டு குழந்தை போல் 15 நிமிடங்களில் 25000 ரூபாய் க்கு மேல் சந்திப்புக்கு வந்த மக்கள் அள்ளி கொடுத்தனர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இதை செய்தனர் ,இதில் இருந்து அவர்களின் ஒற்றுமை மற்றும் பேரவை மேல் உள்ள நம்பிக்கை வெளிப்படுகிறது , பேரவை இன் செயல்பாடுகள் , கொள்கைகள் ,இளைஞர்களின் வேகம் ஆகியவற்றை நேரில் பார்த்து அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக முப்பிடாதி அவர்களுக்கு சில மணி துளிகளில் 25000 ரூபாய் க்கு மேல் நன்கொடை வழங்கிய அவ்வொன்றிய மக்களுக்கு இப்பேரவை நன்றி செலுத்தி அவர்களுக்கு என்றும் கடமை பட்டுள்ளது என்று சொல்லி கொள்கிறோம் .
பேரவை என்றும் அன்பிற்கும் , கண்டிப்பிற்கும் பேர் போனது .
அன்பிற்கு நமது அண்ணன் ஹரி சேனைத்தலைவர் , அரவணைப்புக்கு அருணாச்சலம் சேனைத்தலைவர் , கண்டிப்பிற்கு முத்து விஜயன் சேனைத்தலைவர் என்ற முறையில் தாய் , தகப்பன் போல் இப்பேரவை என்றும் செயல்படும் .
அன்பிற்கு நமது அண்ணன் ஹரி சேனைத்தலைவர் , அரவணைப்புக்கு அருணாச்சலம் சேனைத்தலைவர் , கண்டிப்பிற்கு முத்து விஜயன் சேனைத்தலைவர் என்ற முறையில் தாய் , தகப்பன் போல் இப்பேரவை என்றும் செயல்படும் .
நமது பேரவையின் அடுத்த வரலாறு சந்திப்பு அம்பை ஒன்றியத்தில் இன்னும் மூன்று மாத காலங்களில் நடைபெறும் .
அம்மக்களிடம் நமது குல பெருமையை சொல்வதற்காக காத்து கொண்டிருக்கிறோம் .
அம்மக்களிடம் நமது குல பெருமையை சொல்வதற்காக காத்து கொண்டிருக்கிறோம் .
ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறோம் , இம்முயற்சி என்றும் சேனைத்தலைவர் இனத்திற்காக மட்டுமே , களப்பணி ஆற்றாமல் , களத்தில் இறங்கி போராடாமல் எதையும் நம்மால் மாற்ற முடியாது ,முக நூலில் உக்காந்து கொண்டே , Whatsapp இல் வீரம் சொல்லி கொண்டே இருந்தால் மட்டும் எதுவும் மாறி விடாது , களத்தில் இறங்க வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கான விதை இப்பொழுது விதைக்கப்பட்டுள்ளது .
விரைவில் இரண்டாவது
சேனைத்தலைவர் குல வரலாறு மீட்பு சந்திப்பு 2.0 - நடைபெறும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்
சேனைத்தலைவர் குல வரலாறு மீட்பு சந்திப்பு 2.0 - நடைபெறும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்
ஒற்றுமை ஒன்றே நமது பலம், பெருமையாக சொல்வோம் வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் என்று .
இப்படிக்கு
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனைத்தலைவ பெரும்படையார் படை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனைத்தலைவ பெரும்படையார் படை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர் #பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர் #பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
No comments:
Post a Comment