Saturday, 20 June 2020

மாணவர்களுக்கு என்றும் ஊக்கத்தொகை தேவையில்லை , உதவித்தொகை தான் தேவை .

வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச மக்களே,
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் நோக்கமே , நம் சமுதாய மக்களை கல்வியில் மேல் கொண்டு செல்வதே ,அதை நமது பேரவை சிறப்பாக செய்து கொண்டுள்ளது அதில் சொந்தக்காரன் , சொக்காரன் , ஊர்க்காரன் என்று பார்ப்பதில்லை நமது இனத்தானா அப்பம் கண்டிப்பாக நமது வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்து உறவுகள் தான்
கண்டிப்பாக இது நமது கடமை வேறு எந்த ஒரு நோக்கமும் தேவையில்லை , என்னை பொறுத்தவரை கோவிலா,கல்வியா என்று கேட்டால் என் முதல் சொல் கல்வியே ,ஏனென்றால் கோவில் இருக்கும் கடவுள் சாதிகளை படைத்ததே சாதி மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தான் அவ்வினத்துல் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர்கள்
அனைவரும் ஓன்று சேர்வர் என்ற நம்பிக்கையில் தான் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன , நமது பேரவை ஊக்கத்தொகை கொடுக்காமல் , அவர்களுக்கு 1000 , 2000 கொடுத்து அவர்கள் பயணங்களுக்கே அவை காலியாகி விடும் , ஊக்கத்தொகை கொடுக்காமல் மாணவர்களுக்கு
அவர்கள் படித்து முடிப்பதற்க்கான மொத்த தொகையையும்
உதவி தொகையாக கொடுக்கிறது ,
மாணவர்களுக்கு என்றும் ஊக்கத்தொகை தேவையில்லை , உதவித்தொகை தான் தேவை .
அந்த முறையில் நமது வீரபாகு சேனைத்தலைவர் வாம்சத்து வழி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரத்தின் அருகில் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் வாழும் நம் சேனைத்தலைவர் குல உறவு அருமை தம்பி அஜித்குமார் அவர்கள் இன்ஜினியரிங் படிப்பிற்கான 4th செமஸ்டர் கல்வி தொகை செலுத்த தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் தலைமையில் உதவி கோரினார் அதனடிப்படையில் தலைவர் ஹரி சேனைத்தலைவர் அவர்கள் முன்னிலையில் கல்வி மேம்பாட்டுக் குழு நிர்வாகி பாலகுமார் அவர்களின் கரங்களால் கல்வி உதவித்தொகை இன்று தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தலைமை அலுவலகத்தில் வைத்து கொடுக்கப்பட்டது நம் உறவு கல்வித் துறையில் சிறந்து விளங்கி நம் இனத்திற்கும் பேரவைக்கும் பெருமை சேர்க்க நம் உறவுகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இப்படிக்கு
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

No comments:

Post a Comment