Saturday, 20 June 2020

கொரோனா நோய்க்கு எதிராக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் போராட்டம்

கொரோனா நோய்க்கு எதிராக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் போராட்டம்
கொரோனா நோய்க்கு பதிலாக நாம் பசி என்ற நோய் வந்து விடுமோ என்ற பயம் அநேக மக்களிடம் வந்து விட்டது அதற்க்கு எங்களுக்கு நோய் வந்து இறந்துவிடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர் . நம் சேனைத்தலைவர் மக்களை காப்பது நம் பேரவையின் கடமை நம் பணி இது தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்கு என்று உழைக்கும் நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்களோடு சேர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து பல நாட்களாகியது .
கொரோனா இது தனி மனித எதிரி அல்ல ஒட்டு மொத்த தமிழ் குடிகளின் எதிரி , நம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படும் தருணம் .கஷடப்படும் நம் மக்களின் வலி உணர்ந்த பேரவை என்றும் நம் சமுதாய மக்களின் துயர் தொடைக்க , அவர்களை பாதுக்காக்க முதல் ஆளாக நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை முன்னில் நிற்கும் .இதற்க்கு உதாரணமாக கொரோனா காலத்தில் நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் மேலும் அவற்றை இங்கே சொல்வதன் மூலம் மேலும் நமது உறுப்பினர்கள் உந்துதல் ஏற்பட்டு உதவிகள் செய்வர் என்ற முறையில் இங்கு பதிவு செய்யப்படுகிறது .
தூத்துக்கு நகரத்தில் நமது தூத்துக்குடி நகர பேரவை சார்பாக
100 பேருக்கு அரிசி , பருப்பு , போன்ற மளிகை சாமான்கள் வாங்கி கொடுக்க பட்டுள்ளது .
400 கிலோ அரிசி
50 கிலோ பருப்பு
50 லிட்டர் எண்ணெய்
கடுகு
சீரகம்
மிளகு என்று வீட்டிற்கு தேவையான அணைத்து விதமான உதவிகளும் முக்கியமாக வயதான பெருமக்களுக்கும் , கஷடப்படும் தின கூலி பெருமக்களுக்கும் நம் பேரவை தேடி தேடி உதவி வருகிறது.இதற்க்கு பொருள் உதவி அருளிய நம் சேனைத்தலைவர் இன மக்கள் அனைவருக்கும் உங்கள் பாதம் தொட்டு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.இதனை ஏற்பாடு செய்த பேரவை நகர தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கு நன்றி நன்றி🙏🙏🙏அடுத்த மே மாதம் 10நபர்கள் மிகவும் வறுமையில் இருக்கும் மாற்றுதிறனாளி மற்றும் விதவை பெண்களுக்கு வழங்க இருக்கிறார்கள் என்பதனை தெரிவித்து இருக்கிறார்கள்.🙏🙏🙏
மேலும் நமது பேரவை உறுப்பினர்கள் தென்காசி , திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து கொண்டு அவர்களின் பணிகளை செய்து கொண்டு உள்ளனர் . இதன் அடுத்த கட்டமாக நமது நண்பர் Defence - Assistant Commissioner அண்ணன் இளவரசன் அவர்களின் வேண்டுகோள் படி , தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் போலீஸ் சரகத்திற்கு அவர்களின் DSP அவர்களிடம் 5000 மதிப்பு மிக்க முகக்கவசங்கள் பேரவை சார்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் 5000 மதிப்பு மிக்க சானிடைசேர் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .
இதற்காக 5000 கொடுத்த பேரவை தலைவர் ஹரி சேனைத்தலைவர் அவர்களுக்கும் மற்றும் 5000 கொடுத்த தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ஐயா சீனு ஜெயராமன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
மேலும் உதவிகள் எவரேனும் செய்ய விரும்பின் அல்லது கஷ்டப்படுபவர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்களுக்கு உதவிகள் வேண்டும் என்ற பச்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204





No comments:

Post a Comment